ஹூண்டாய் கார்களுக்கு இலவச சர்வீஸ் முகாம்: சலுகைகளுடன் நாளை துவங்குகிறது

Santro
கார்களுக்கு இலவச சர்வீஸ் முகாமை நடத்துகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். நாளை முதல் வரும் 25ந் தேதி வரை நடைபெறும் இந்த சர்வீஸ் முகாமை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள அந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், கார் விற்பனை தவிர வாடிக்கையாளர் சேவையிலும் முன்னிலை வகிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை வழங்கும் வகையில் ஆண்டுதோறும் இலவச கார் சர்வீஸ் முகாமை நடத்தி வருகிறது.

இந்த வரிசையில், தனது 12 வது இலவச கார் சர்வீஸ் முகாமை நாளை துவங்குகிறது ஹூண்டாய். வரும் 25ந் தேதி வரையில் நடைபெற உள்ள இந்த ச்ர்வீஸ் முகாமில் ஏராளமான சலுகைகளை ஹூண்டாய் வழங்குகிறது. நாடு முழுவதும் உள்ள 785 ஹூண்டாய் சர்வீஸ் சென்டர்களில் இந்த சர்வீஸ் முகாம் நடக்கிறது.

எஞ்சின், கியர் பாக்ஸ், எலக்ட்ரிக்கல் சிஸ்டம், அன்டர் பாடி ரிப்பேர், ஏசி உள்பட 80 விதமான பரிசோதனைகளை இந்த சர்வீஸ் முகாமில் செய்யப்படும். உதிரிபாகங்கள் மற்றும் குறிப்பிட்ட அக்சசெரீஸ்களின் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

இந்த சர்வீஸ் முகாமில் கலந்துகொள்ளும் கார்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகையும் வழங்கப்படும். லேபர் சார்ஜிலும் 20 சதவீதம் கழிவு தரப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தவிர, ஷெல் ஆயில் நிறுவனம் மற்றும் எச்ஓஇசி ஆகிய நிறுவனங்களும் சலுகைகளை வழங்கும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு மேலான ஹூண்டாய் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்றும், இந்த சர்வீஸ் முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Article Published On: Thursday, March 15, 2012, 11:08 [IST]
English summary
Country's second largest car maker Hyundai has announced of its 12th nationwide free car service mela from 16th to 25th of this month. The free service mela will offer attractive comprehensive tests and discounts for customers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+