அதிக செயல்திறன் கொண்ட புதிய கப்பா எஞ்சினுடன் வரும் புதிய ஐ20

புளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட ஐ20 காரை சமீபத்தில் சர்வதேச சந்தைக்கு காட்சிபடுத்தியது ஹூண்டாய் மோட்டார்ஸ். விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் கார் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில், புதிய புளூயிடிக் ஐ20 காரில் நவீன தொழில்நுட்பம் கொண்ட புதிய கப்பா எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 1248 சிசி திறன் கொண்டது.
இது குறைந்த கார்பன் புகை அதாவது ஒரு கிமீக்கு 110 கிராம் கார்பனை மட்டுமே வெளியிடும் அதேவேளையில் அதிக எரிபொருள் சிக்கனத்தையும் தரவல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய கப்பா எஞ்சின் 95 பிஎச்பி முதல் 120 பிஎச்பி வரை(தற்போதைய கப்பா எஞ்சின் அதிகபட்சம் 80 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்) ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications