சென்னை ஹூண்டாய் ஆலையில் தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்: கார் உற்பத்தி பாதிப்பு

ஹூண்டாய் கார் ஆலை
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் ஆலையை சேர்ந்த தளவாட பரிமாற்று பிரிவில் வேலை பார்க்கும் தற்காலிக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கார் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஆலையில் தளவாட பரிமாற்று பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 41 கோரிக்கைகளை அமல்படுத்த வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஹூண்டாயின் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கமான ஹூண்டாய் இந்தியா பணியாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

தளவாட பரிமாற்று பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் ஹூண்டாய் ஆலையின் தொழிற்சங்கத்தில் இடம்பெறவில்லை. இருப்பினும், தளவாட மாற்று தொழிலாளர்களின் நலன்களை கருத்தில்க்கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

இதனால், ஹூண்டாய் ஆலையில் கார் உற்பத்தி வழக்கத்தைவிட குறைந்துள்ளது. இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா பணியாளர் சங்கத்தின்(எச்எம்ஐஇயூ) செயலாளர் ஸ்ரீதர் கூறுகையில்," தளவாட பரிமாற்று தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், நிர்வாகத்திற்கு எதிராக எங்களது தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும், என்று கூறினார்.

நாட்டின் இரண்டாவது பெரிய கார் ஆலையாக விளங்கும் இந்த ஆலையில் ஆண்டுக்கு 6.3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இயான், சான்ட்ரோ, ஐ10, ஐ20 உள்ளிட்ட கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, October 8, 2012, 14:34 [IST]
English summary
Production at Hyundai Motor's Chennai car plant has been hit following a strike by workers handling logistics operations.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+