சென்னையில் புதிய எஞ்சின் ஆலை: பல்க் முதலீடு செய்யும் ஹூண்டாய்

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்திய கார் மார்க்கெட்டில் மாருதிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், அதிகம் விற்பனையாகும் சிறிய கார் செக்மென்ட்டில் வெறும் பெட்ரோல் மாடல்களை மட்டும் வைத்திருப்பதால் விற்பனை ஆஹா, ஓஹோ என்று இல்லாமல் மந்தமான வளர்ச்சியை பெற்று வருகிறது.
எனவே, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு டீசல் கார்களை அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் முடிவு செய்திருக்கிறது. ஐ10 காரின் டீசல் மாடலை களமிறக்குவதில் அந்த நிறுவனம் தற்போது முழு மூச்சாக இறங்கியிருக்கிறது.
மேலும், புதிய டீசல் கார்களை அறிமுகம் செய்யவும் அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதற்கு தக்கவாறு புதிய டீசல் எஞ்சி்ன் உற்பத்தி பிரிவை அமைக்க ஹூண்டாய் முடிவு செய்திருக்கிறது. இதற்காக, ரூ.1,600 கோடி அளவுக்கு மிகப்பெரிய முதலீட்டை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய முதலீடு மூலம் தமிழகத்தில் கூடுதல் வேலைவாய்ப்புகள் ஹூண்டாய் மூலம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications