இதுவரை 750 எலன்ட்ரா கார்கள் புக்கிங்: ஹூண்டாய்

Hyundai Elantra
இதுவரை 750 புதிய எலன்ட்ரா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், டீசல் ஐ10 மற்றும் புதிய யுட்டிலிட்டி ரக காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அட்டகாசமான ப்ளூயிடிக் தத்துவத்தில் வடிவமைக்கப்பட்ட எலன்ட்ரா காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் நேற்று அறிமுகம் செய்தது. ஆனாலும், இந்த காருக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டுவி்டடது.

இந்த நிலையில், இதுவரை 750 எலன்ட்ரா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் வந்துள்ள புதிய எலன்ட்ரா வருகை ரினால்ட் ப்ளூயன்ஸ், டொயோட்டா கரொல்லா, செவர்லே குரூஸ் ஆகிய கார்களுக்கு சிறிது பாதிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, புதிய டீசல் கார்களை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்தும் அந்த நிறுவனம் தகவல்களை முதன்முறையாக பகிர்ந்து கொண்டுள்ளது. ஹூண்டாய் நிர்வாக இயக்குனர் சர் ருக் ஹன் கூறுகையில், "டீசல் கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டீசல் மாடல் ஐ10 காரை களமிறக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

தவிர, புதிய யுட்டிலிட்டி ரக காரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால், இதுகுறித்து உறுதியாகவும், விரிவாகவும் எதுவும் கூற இயலாது," என்று கூறினார்.

ஐரோப்பிய மார்க்கெட்டில் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஐ10 காரை ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது. அந்த எஞ்சினில் சில மாற்றங்கள் செய்து இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 14, 2012, 13:25 [IST]
English summary
Hyundai Elantra has launched in both petrol and diesel models yesterday. The new premium sedan car has bagged 750 booking numbers so far, says hyundai reports.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+