லிட்டருக்கு 26.3 கிமீ மைலேஜ் தரும் இயான்: பிலிப்பைன்ஸ் சோதனையில் தகவல்

மாருதி ஆல்ட்டோவுக்கு போட்டியாக கடந்த ஆண்டு இயான் காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் விற்பனையில் ஓரளவு நல்ல எண்ணிக்கையை இயான் பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில், இயான் காரை நேபாளம் மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு ஏற்கனவே இயான் ஏற்றுமதியை ஹூண்டாய் துவங்கிவிட்டது. இதைத்தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் மார்க்கெட்டிலும் விரைவில் இயான் காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்.
அங்குள்ள ஹூண்டாய் டீலரில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இயான் கார் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து வருவகிறதாம். இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் இயான் கார் லிட்டருக்கு 26.3 கிமீ மைலேஜ் செல்வதாக அங்குள்ள டீலர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அதே 814 சிசி பெட்ரோல் எஞ்சினுடன்தான் பிலிப்பைன்சிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் ஒரு லிட்டருக்கு 21.1 கிமீ மைலேஜ் செல்வதாக ஹூண்டாய் தெரிவிக்கிறது.
ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் லிட்டருக்கு 26.3 கிமீ மைலேஜ் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சாலை நிலைகள் மற்றும் சீதோஷ்ண நிலைகள் காரணம் காட்டப்படுகின்றன.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ரூ.5.21 லட்சம் முதல் ரூ.5.92 லட்சம் விலையில் இயான் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








