விற்பனையில் 50,000ஐ எட்டிய ஹூண்டாய் இயான்

கடந்த ஆண்டு அக்டோபர் மத்தியில் இயான் ஹேட்ச்பேக் காரை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வந்தது. ரூ.2.69 லட்சம் ஆரம்ப விலையில், அசத்தலான புளூயிடிக் வடிவமைப்பில் வந்த இயான் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
மாருதி ஆல்ட்டோவுக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில் இயான் இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், அது ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றொரு மாடலான சான்ட்ரோ கார் விற்பனையில்தான் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயான் வருவதற்கு முன்பு சராசரியாக மாதத்திற்கு 6,500 சான்ட்ரோ கார்கள் விற்பனையாகி வந்தன. ஆனால், தற்போது சான்ட்ரோ விற்பனை 5,000க்கும் கீழே குறைந்துவிட்டது. இந்த நிலையில், மாதத்திற்கு சராசரியாக தற்போது 7,500 இயான் கார்கள் விற்பனையாகின்றன.
இந்த நிலையில், கடந்த மாதம் எல்பிஜி மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், இயான் விற்பனை சூடுபிடித்துள்ளது. மேலும், அண்டை நாடான நேபாளத்திலும் இயான் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதற்காக, இயான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. விற்பனைக்கு கொணடு வரப்பட்டு கடந்த நான்கரை மாதங்களில் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இயான் கார்களை ஒட்டுமொத்தமாக சேர்த்து 50,000 இயான் கார்கள் இதுவரை விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








