இன்டர்நெட்டில் அதிகம் தேடப்பட்ட கார் ஹூண்டாய் இயான்!

இன்டர்நெட்டில் அதிகம் தேடப்பட்ட கார்கள் குறித்த விபரங்களை பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் கூகுள் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கார் மாடல்களில் எந்த கார் அதிகம் தேடப்பட்டது என்ற புள்ளி விபர பட்டியலை கூகுகள் வெளியிட்டிருக்கிறது.
இதில், கடந்த ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த சிறிய காரான இயான் முதலிடத்தில் உள்ளது.மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி 500 இரண்டாம் இடமும், ஹோண்டா பிரியோ மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.
டாடாவின் புதிய மான்ஸா, மாருதி கிசாஷி, டொயோட்டோ லிவா, ஹூண்டாய் வெர்னா, நிசான் சன்னி, ஸ்கோடா ரேபிட், ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஆகியவை அதிகம் தேடப்பட்ட டாப் 10 கார் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இதுதவிர, வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் பேர் இன்டர்நெட்டில் கார் விபரங்களை முழுமையாக தெரிந்துகொண்ட பின்னரே கார் வாங்க செல்கின்றனர் என்ற தகவலையும் கூகுளின் புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








