இயானை வைத்து ஏற்றுமதியை அதிகரிக்க ஹூண்டாய் கணக்கு

கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நம் நாட்டு கார் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவிலிருந்து அண்டை நாடுகள் மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு கார் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த இயான் கார் விற்பனையில் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும், தனது ஏற்றுமதி வளர்ச்சிக்கு இயானை பயன்படுத்தவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கிழக்காசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் மேற்கண்ட நாடுகளுக்கு ஏற்றுமதி துவங்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஐரோப்பிய மார்க்கெட்டில் பொருளாதார மந்த நிலையால் கார் விற்பனை சரிவு கண்டுள்ள நிலையில், இயானை ஏற்றுமதி செய்வதன் மூலம் தனது விற்பனை சரிவை தடுத்துக்கொள்ள முடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.
வடிவமைப்பு, வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்திலும் இயான் நிகரற்ற காராக இருப்பதால் அனைத்து வித மார்க்கெட்டுகளிலும் இயானை நம்பிக்கையுடன் வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் ஹூண்டாய் நிறுவனம் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








