ஆலை தொழிலாளர்களுக்கு 45% ஊதிய உயர்வு கொடுத்த ஹூண்டாய்

பெரும் தொழிலாளர் பிரச்னையில் சிக்கி தவித்த மாருதி கடந்த மாதம் ஆலை தொழிலாளர்களுக்கு 75 சதவீதம் ஊதிய உயர்வு கொடுத்து பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த நிலையில், மாருதிக்கு அடுத்து நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாயும் தொழிலாளர்களுக்கு கணிசமாக ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஊதிய நிர்ணய திட்டத்தின்படி தனது தொழிலாளர்களுக்கு 45 சதவீத ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. இதன்மூலம், ஒரு பணியாளருக்கு சராசரியாக ரூ.14,283 ஊதிய உயர்வு கிடைக்கும். இதில், பல்வேறு படிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
கடந்த ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊதிய உயர்வு வரும் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, ஹூண்டாயின் அங்கீகாரம் பெற்ற யுனைடைட் யூனியன் ஆப் ஹூண்டாய் எம்ப்ளாயீஸ் தொழிற்சங்கத்துக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.


Click it and Unblock the Notifications








