ப்ளூயிடிக் டிசைனில் டீசல் ஐ10 காரை களமிறக்க ஹூண்டாய் தீவிரம்

Hyundai i10
அடுத்த ஆண்டு டீசல் ஐ10 காரை அறிமுகப்படுத்தும் பணிகளை ஹூண்டாய் மோட்டார்ஸ் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிய கார்களில் டீசல் மாடல் இல்லாததால் விற்பனையில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறது ஹூண்டாய். எனவே, ஐ10 டீசல் மாடலை விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சிகளை ஹூண்டாய் தீவிரப்படுத்தியுள்ளது.

ப்ளூயிடிக் டிசைனில் வடிவமைக்கப்பட்டு வரும் புதிய ஐ10 காருக்கு, 1.1 லிட்டர் டீசல் எஞ்சினை பொருத்த ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. மேலும், ப்ளூயிடிக் டிசைன் ஐ10 காரை துருக்கியை சேர்ந்த கிபார் ஹோல்டிங் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்து வருகின்றன.

பெரும் முதலீட்டில் புதிய ப்ளூயிடிக் ஐ10 காரையும், டீசல் எஞ்சினையும் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து வடிவமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, புதிய 800 சிசி பெட்ரோல் எஞ்சினையும் ஹூண்டாய் உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த புதிய எஞ்சினை தற்போது இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் கியா பிக்காண்டோ காரில் பொருத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இதை ஹூண்டாய் உறுதிபடுத்தவில்லை. இந்த நிலையில், அடுத்த ஆண்டு இறுதியில் ப்ளூயிடிக் ஐ10 கார் டீசல் மாடலுடன் களமிறக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Article Published On: Friday, June 15, 2012, 10:26 [IST]
English summary
Hyundai motors is working on the next-gen Hyundai i10 hatchback now. Hyundai will not be developing the car alone on this project as it is jointly working with Turkey’s Kibar Holding company.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+