அசத்தலான புதிய டிசைன் தத்துவத்தை உருவாக்கி வரும் ஹூண்டாய்

ப்ளூயிடிக் பிரிசிஸன்
ப்ளூயிடிக் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ப்ளூயிடிக் பிரிசிஸன் என்ற பெயரில் புதிய வடிவமைப்பு தத்துவத்தை ஹூண்டாய் உருவாக்கி வருகிறது. இது ப்ளூயிடிக்கை டிசைனை காட்டிலும் அதிக கவர்ச்சியாக இருப்பதோடு மிரட்டலாகவும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிமுகம் செய்த ப்ளூயிடிக் வடிவமைப்பு தத்துவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயான் முதல் சொனாட்டா வரையிலான பெரும்பாலான கார்கள் ப்ளூயிடிக் டிசைனுக்கு மாறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துவிட்டன.

ப்ளூயிடிக் டிசைனில் மாறிவிட்ட அனைத்து கார்களும் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, வெர்னா மற்றும் இயான் கார்களுக்கு ப்ளூயிடிக் டிசைன் நல்ல மதிப்பை பெற்றுத் தந்துள்ளது. இதனால், விற்பனையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ப்ளூயிடிக் வெற்றியை தொடர்ந்து புதிய டிசைன் கான்செப்ட்டை ஹூண்டாய் உருவாக்கி வருகிறது. இது ப்ளூயிடிக் டிசைனை மேம்படுத்தப்பட்ட டிசைன் கான்செப்ட்டாக இருக்கும். இந்த கான்செப்ட்டுடன் வரும் கார்கள் படு அசத்தலாக இருக்குமென தெரிவிக்கின்றன ஆட்டோமொபைல் துறை வட்டாரத் தகவல்கள்.

ப்ளூயிடிக் பிரிசிஸன் என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் இந்த புதிய டிசைன் கான்செப்ட்டுடன் முதலாவதாக சொனாட்டா கார் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Article Published On: Monday, July 23, 2012, 17:02 [IST]
English summary
South Korean car maker Hyundai motors is developing a new design concept follow based fluidic design platform. The new design concept code named ‘Fluidic Precision’-the next big thing to come out of Hyundai design studios.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+