கார் சர்வீஸ் செய்யஆன்லைனில் முன்பதிவு: ஹூண்டாய் அறிமுகம்

கார் சர்வீசுக்காக புதிய இணையதளத்தை ஹூண்டாய் கார் நிறுவனம் துவங்கியுள்ளது. இதன்மூலம், சர்வீஸ் செய்வதற்கான முன்பதிவு உள்ளிட்ட அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் இருந்த இடத்திலிருந்தே பெற முடியும்.

இந்த புதிய தளத்தில் கார் சர்வீஸ் விபரம், சர்வீஸ் செய்வதை நினைவூட்டும் வசதி, அருகிலுள்ள சர்வீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட சர்வீஸ் தொடர்பான அனைத்து விபரங்களும் இதில் இடம்பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் கார்கள்

மேலும், சர்வீஸ் செய்வதற்கான செலவீனத்தை கணக்கிடும் கால்குலேட்டர், இன்ஸ்யூரன்ஸ் கால்குலேட்டர், காரை பராமரிப்பதற்கான டிப்ஸ், வாரண்டிக்கான விதிமுறைகள் உள்ளிட்ட விபரங்களையும் பெற முடியும்.

இந்த புதிய சேவை குறித்து ஹூண்டாய் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் அர்விந்த் சக்சேனா கூறுகையில்," முதன்முறையாக சர்வீசுக்காக பிரத்யேக இணையதளத்தை துவங்கியுள்ளோம்.

இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயன் தரக்கூடியதாக இருக்கும். மேலும், இதுபோன்ற புதிய மற்றும் புதுமையான வசதிகளை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்," என்றார்.

Article Published On: Wednesday, July 4, 2012, 16:59 [IST]
English summary
Country’s second largest car manufacturer Hyundai motors has introduced of its Online Service website. The new micro website is providing service related informations.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+