அடுத்த மாதம் 13ல் எலன்ட்ராவை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய்
ப்ளூயிடிக் டிசைன் தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய எலன்ட்ரா காரை அடுத்த மாதம் 13ந் தேதி அறிமுகப்படுத்துகிறது ஹூணடாய் நிறுவனம்.
மார்க்கெட்டில் போனியாகததால் பழைய எலன்ட்ரா மாடலை கடந்த 2007ம் ஆண்டு விற்பனையை நிறுத்தியது ஹூண்டாய். அது முதல் டி செக்மென்ட்டில் ஹூண்டாய்க்கு வெற்றிடமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், ப்ளூயடிக் டிசைன் தத்துவத்தில் புதிய எலன்ட்ரா காரை வடிவமைத்துள்ளது ஹூண்டாய்.

புதிய எலன்ட்ராவில் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், டீசல் எஞ்சின் 126 பிஎச்பி ஆற்றலையும், பெட்ரோல் எஞ்சின் 147 பிஎச்பி ஆற்றலையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இரண்டு மாடல்களும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.
இந்த நிலையில், அடுத்த மாதம் 13ந் தேதி புதிய எலன்ட்ராவை ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த இருக்கிறது. எலன்ட்ராவுக்கு தற்போது முன்பதிவும் செய்து வருகிறது ஹூண்டாய். புதிய எலன்ட்ரா கார் ரூ.13 லட்சம் முதல் ரூ.16 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








