பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காருக்கு போட்டியாக வரும் ஹூண்டாய் கார்

ஹூண்டாய் நிறுவனத்தின் ஜெனிஸிஸ் கார் பிளாட்பார்மில் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் செடான் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆர்கே என்ற குறியீட்டு பெயரில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் செடான் கார் பிஎம்டபிள்யூ 3 சீரீஸ் மார்க்கெட்டை உடைக்கும் வகையில் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரில் இருக்கும் வசதிகளை போன்றே இந்த புதிய செடான் காரிலும் தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹூண்டாய் ஜெனிஸிஸ் காரில் 5 விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஜெனிஸிஸ் கூபே மாடலில் 204 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சின், 260 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 3.8 லிட்டர் வி6 எஞ்சின்களும், செடான் மாடலில் 248 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 3.8 லிட்டர் எஞ்சின், 287 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 4.6 லிட்டர் வி8 எஞ்சின் மற்றும் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் போன்ற எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, இதே எஞ்சின் ஆப்ஷன்களுடன் புதிய ஸ்போர்ட்ஸ் செடான் காரை விற்பனை கொண்டு வர முடியும். மேலும், இந்த கார் ரியர் வீல் டிரைவ் கொண்டதாக இருக்கும். இந்த புதிய கார் வரும்போது ஜெனிஸிஸ் கூபே மாடலின் விற்பனையை நிறுத்திவிடவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








