ப்ளூயிடிக் சொனாட்டா பிரிமியம் காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்

தனது புதிய ப்ளூயிடிக் டிசைன் பிளாட்பார்மில் அனைத்து கார்களையும் வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வந்துகொண்டிருக்கிறது ஹூண்டாய்.
முதலில் வெர்னா, அடுத்து இயான் தற்போது சொனாட்டா ஆகிய மாடல்களில் ப்ளூயிடிக் டிசைன் கான்செப்ட்டில் வடிமவைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சொனாட்டா காரை ஹூண்டாய் பார்வைக்கு வைத்திருந்தது.
இந்த நிலையில், இந்த காரை தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹூண்டாய். புதிய சொனாட்டாவில் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 200 பிஎச்பி ஆற்றலை வாரி இறைக்கும் ஆற்றல் கொண்டது.
அருமையான கையாளுமை, சொகுசு வசதிகளுடன் சொனாட்டா வந்துள்ளது. 6 காற்றுப் பைகள், ஏபிஎஸ் பிரேக், இபிடி என அனைத்து பாதுகாப்பு வசதிகளும் இந்த காரில் இருக்கிறது. இந்த புதிய கார் ரூ.18.52 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
புதிய சொனாட்டாவின் ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.20.61 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா அக்கார்டு, வோக்ஸேவேகன் ஜெட்டா ஆகிய கார்களுக்கு ஹூண்டாய் சொனாட்டா போட்டியாக இருக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








