ரூ.2.98 லட்சம் ஆரம்ப விலையில் எல்பிஜி இயான்: ஹூண்டாய் அறிமுகம்

கடந்த ஆண்டு அக்டோபரில் தனது சிறிய ஹேட்ச்பேக் கார் இயானை ஹூண்டாய் அறிமுகம் செய்தது. ரூ.2.69 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இயான் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
அடக்கமாகவும் அதேவேளை புதிய தலைமுறைக்கான வடிவமைப்புடன் 814 சிசி எஞ்சினுடன் வந்த இயான் மைலேஜிலும் பின்னுகிறது. இருப்பினும், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இயானின் எல்பிஜி மாடலை களமிறக்க முடிவு செய்தது.
இந்த நிலையில், ரூ.2.98 லட்சம் ஆரம்ப விலையில் எல்பிஜி இயானை மூன்று வேரியண்ட்களில் ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது.
32 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேக்டரி பிட்டடு எல்பிஜி சிலிண்டர் மற்றும் 34 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் கொண்டதாக புதிய இயான் வந்துள்ளது. மேலும், எல்பிஜி மற்றும் பெட்ரோல் எரிபொருளை தேர்வு செய்து இயக்கும் விதத்தில் டேஷ்போர்டில் பிரத்யேக பட்டனும் கொடுக்கப்பட்டுள்ளது.
ரூ.2.69 லட்சம் முதல் ரூ.3.42 லட்சம் விலையில் புதிய எல்பிஜி இயான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட எல்பிஜி இயானுக்கு 2 ஆண்டுகள் வாரண்டியும் கொடுப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








