ப்ளூயிடிக் ஐ20 காரை விற்பனைக்கு கொண்டு வந்த ஹூண்டாய்

ரூ.4.73 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஐ20 ஹேட்ச்பேக் காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் சற்றுமுன் அறிமுகம் செய்தது. இந்தியாவில்தான் இந்த புதிய ஐ20 கார் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மாத துவக்கத்தில் ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய ப்ளூயிடிக் ஐ20 காரை பார்வைக்கு அறிமுகம் செய்தது ஹூண்டாய். இந்த நிலையில், இன்று இந்த புதிய ஐ20 காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹூண்டாய்.

புதிய ஐ20யில் ட்யூனிங் செய்யப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பொருத்தியுள்ளது ஹூண்டாய். இந்த எஞ்சின் 84 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதேபோன்று 90 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சினுடன் வந்துள்ளது புதிய ஐ20.

வெளிப்புறம் முழுவதும் ஹூண்டாய் ப்ளூயிடிக் டிசைன் தத்துவத்தை பரைசாற்றுகிறது. உட்புறத்தில் புதுமைகளை கண்டிருக்கிறது ப்ளூயிடிக் ஐ20. எல்இடி பனி விளக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வசதிகள் இருக்கின்றன. அனைத்து வசதிகளுடன் கூடிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் என்பதை கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம்.

தற்போது 6 கியர்கள் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல்களில் புதிய ஐ20 வந்திருக்கிறது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது 6 வது கியரில் ஓட்டும்போது மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 28, 2012, 18:05 [IST]
English summary
Hyundai has silently launched the fluidic i20 hatchback in India with a starting price of Rs.4.73 lakhs. The new features in the i20 are its design and more powerful engine.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+