அக்ஸென்ட்டுக்கு பதில் புதிய செடான் கார்: ஐ20 பிளாட்பார்மில் உருவாகிறது

நாட்டின் இரண்டாவது கார் நிறுவனமாக திகழும் ஹூண்டாய் கார் நிறுவனம் விரைவில் ப்ளூயிடிக் ஐ20 காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது. மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் புத்தம் புதிய ஐ20 காரையும் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய ஐ20 கார் ப்ளூயிடிக் தலைமுறைக்கு அடுத்த தலைமுறை அம்சங்களுடன் வரும் என்று தெரிகிறது. தவிர, இந்த ஐ20 கார் பிளாட்பார்மில் புதிய என்ட்ரி லெவல் செடான் காரையும் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
மாருதி ஸ்விப்ட் டிசையர், டொயோட்டோ எட்டியோஸ் ஆகிய என்ட்ரி லெவல் செடான் கார்களுக்கு இந்த புதிய ஐ20 செடான் கார் கடும் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








