ஹூண்டாயின் விற்பனைப் பிரிவுக்கு புதிய துணைத் தலைவர் நியமனம்

Hyundai Logo
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு துணைத் தலைவராக ராகேஷ் ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவுக்கான துணைத் தலைவராக அர்விந்த் சக்சேனா இருந்து வந்தார்.

இயான், புதிய வெர்னா, புதிய ஐ20 மற்றும் ஐஜென் ஐ10 உள்ளிட்ட பல கார் மாடல்களை அறிமுகம் செய்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த நிலையில், தனது பதவியை சமீபத்தில் அவர் ராஜினாமா செய்தார். அவர் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து, அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ராகேஷ் ஸ்ரீவத்சவா புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது. ராகேஷ் ஸ்ரீவத்சவா மாருதியில் பணிபுரிந்தவர். கடந்த ஏப்ரல் மாதம்தான் ஹூண்டாய் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

மேலும், மார்க்கெட்டிங் பிரிவில் 24 ஆண்டுகாலம் அனுபவம் மிக்கவர். இனி ஹூண்டாயின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பொறுப்புகளை ராகேஷ் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 27, 2012, 10:35 [IST]
English summary
Hyundai Motors India has named Mr Rakesh Srivastava as its new Vice President National Sales today. The carmaker in a press release has stated that Mr Srivastava will take the new position with immediate effect following the resignation of Mr Arvind Saxena last week.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+