ஹூண்டாய் மார்க்கெட்டிங் இயக்குனர் ராஜினாமா: போக்ஸ்வேகனுக்கு சேர்கிறார்

போக்ஸ்வேகன்
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு இயக்குனராக இருந்த அர்விந்த் சக்சேனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் மார்க்கெட்டில் நிலவும் கடும் போட்டி காரணமாக, மார்க்கெட்டிங் பிரிவில் அதிரடி மாற்றங்களை கார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. குறிப்பாக, உயர்மட்ட அளவில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பிஎம்டபிள்யூ தலைவர் சமீபத்தில் அதிரடியாக மாற்றப்பட்டார்.

எதிர்பார்த்த விற்பனை வளர்ச்சியை எட்டாததால் மார்க்கெட்டிங் பிரிவுக்கு போக்ஸ்வேகன் தலைமை அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு மூத்த அதிகாரிகள் ராஜினாமா செய்தனர். இந்த இடங்களை நிரப்ப நாட்டின் முன்னணி கார் நிறுவனங்களான மாருதி மற்றும் ஹூண்டாய் மூத்த அதிகாரிகளை போக்ஸ்வேகன் இழுத்து வருகிறது.

மாருதியின் மூத்த அதிகாரிகள் இருவரை ஏற்கனவே போக்ஸ்வேகன் இழுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில், ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனையில் முக்கிய பங்காற்றி வந்த அர்விந்த் சக்சேனாவையும் போக்ஸ்வேகன் இழுத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹூண்டாய் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பதவியிலிருந்து அர்விந்த் சக்சேனா ராஜினாமா செய்துவிட்டதாக பிஸினஸ் லைன் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. போக்ஸ்வேகனில் நீரஜ் கார்க்கின் இடத்தை அர்விந்த் சக்சேனா நிரப்ப உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2006ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனத்தில் சேர்ந்த அர்விந்த் சக்சேனா அந்த நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்காற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, July 20, 2012, 15:29 [IST]
English summary
Hyundai motors marketing director Arvind Saxena has resigned from the company recently, reports said. The report also stated that Saxena, who has been with Hyundai since 2006, is now expected to join Volkswagen as the head of its Marketing and Sales team for India
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+