கார்களுக்கு '5 ஸ்டார்' உத்தரவாதம் தரும் ஹூண்டாய்
சான்ட்ரோ, ஐ10 கார்களுக்கு 5 ஸ்டார் உத்தரவாதத்துடன் கூடிய சிறப்பு சலுகை திட்டத்தை ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
பெட்ரோல் கார் விற்பனை படு மந்தமாக இருக்கிறது. பெட்ரோல் கார் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை கார் நிறுவனங்கள் வழங்குவதாக அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஹூண்டாய் மோட்டார்ஸ் புதிய சலுகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. சான்ட்ரோ மற்றும் ஐ10 கார்களுக்கு 5 அம்ச உத்தரவாதத்துடன் கூடிய புதிய சலுகை திட்டத்தை வழங்குவதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
பராமரிப்பு, எஞ்சின், வாரன்ட்டி, எக்ஸ்சேஞ்ச், அவசர உதவி ஆகியவற்றுக்கு 5 அம்ச உத்தரவாதத்தை வழங்குவதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவாதத்தில் சர்வீஸ் கட்டணம், உதிரிபாகங்கள் மற்றும் 3 ஆண்டுகள் அல்லது 40,000கிமீ வரை சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சான்ட்ரோ மற்றும் ஐ10 கார்களுக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் ஒருங்கிணைந்த இன்ஸ்யூரன்ஸ் சலுகையையும் வழங்குவதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இந்த 5 ஸ்டார் சலுகை திட்டத்தின் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.50,000 வரை மிச்சப்படுத்த முடியும் என்று ஹூண்டாய் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications