கார்களுக்கு அதிரடி தள்ளுபடி சலுகையை வழங்கும் ஹூண்டாய்
விற்பனையை தூக்கி நிறுத்த அனைத்து கார்களுக்கு அதிரடி தள்ளுபடி சலுகையை அறிவி்த்துள்ளது ஹூண்டாய். இந்த சலுகையை வரும் 25ந் தேதி வரை மட்டுமே வழங்குவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சலுகை இனி கிடைக்காது என்ற பிரச்சாரத்துடன் இந்த சலுகையை ஹூண்டாய் அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலம் 20,000 முதல் 40,000 வரை விலையில் தள்ளுபடி கிடைக்கும்.
மேலும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் தள்ளுபடி சலுகை மூலம் தற்போது ஐ10 கார் ரூ.3.54 லட்சம் ஆரம்ப விலையில் வாங்க முடியும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்தில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஐ20 காரையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். ஆம். ஐ20 காருக்கு 32,000 வரை சேமிப்பு சலுகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
ஆக்செனட் மற்றும் வெர்னா செடான் கார்களுக்கு 20,000 முதல் 30,000 வரை தள்ளுபடி பெறலாம். சான்டா பீ பிரிமியம் எஸ்யூவிக்கு கூட 30,000 வரை சலுகையை பெற முடியும். விலையில் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகைகளை தவிர இயான் உள்ளிட்ட மாடல்களுக்கு இலவச இன்ஸ்யூரன்சை வழங்குவதாகவும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








