புதிய டீசல் மாடல்களை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டம்

Hyundai i10
இயான் உள்ளிட்ட அனைத்து கார்களிலும் டீசல் மாடலை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

முதலாவதாக ஐ10 டீசல் மாடலை அறிமுகப்படுத்த ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. இந்த கார் விரைவில் மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், ஐரோப்பாவில் ஐ10 டீசல் காரை ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது. அங்கு விற்பனை செய்யப்படும் ஐ10 காரில் 1.1 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே, இதே எஞ்சினுடன் புதிய ஐ10 காரை விரைவில் இந்தியாவில் ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஐ10 டீசல் மாடல் லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கடுத்து, இயான் டீசல் மாடலையும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்போது பெட்ரோல், எல்பிஜியில் விற்பனை செய்யப்பட்டு வரும் இயான் விற்பனையில் அந்த நிறுவனத்துக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது.

அந்த வகையில், ஒட்டுமொத்த கார்களிலும் டீசல் கார்களை அறிமுகப்படுத்துவதே ஹூண்டாயின் தற்போதைய மெகா திட்டம். ஆனால், புதிய டீசல் மாடல்கள் அறிமுகம் குறி்தது ஹூண்டாய் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Article Published On: Saturday, June 30, 2012, 12:20 [IST]
English summary
Hyundai Motor India, the closest competitor to India's leading carmaker Maruti Suzuki is planning to launch its entire range of diesel engines in India. The South Korea based carmaker had earlier announced plans to launch a diesel engine plant in India which would build engines for its existing and upcoming models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+