அடுத்த வாரம் ஹூண்டாய் கார் விலை உயர்கிறது!

Eon
உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதை ஈடுகட்டும் வகையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்.

கார் விலை உயர்வு வாடிக்கையாகிவிட்டது. ரூபாய் மதிப்பு சரிவு, உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு என ஏதோ ஒரு காரணத்தை காட்டி அவ்வப்போது கார் விலையை உயர்த்தி வருகின்றன கார் நிறுவனங்கள்.

மாருதி, ஹோண்டா, ஜெனரல் மோட்டார்ஸ் என முன்னணி நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தி விட்ட நிலையில், ஹூண்டாயும் கார் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் அனைத்து கார் மாடல்களின் விலையையும் உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனம் எவ்வளவு உயர்த்தப்படும் என்ற விபரத்தை வெளியிடவில்லை. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லாத அளவில் உயர்த்தப்படும் என்று அந்த நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு துணைத் தலைவர் ராகேஷ் ஷர்மா கூறினார்.

இதனிடையே, ஹூண்டாய் கார் ஆலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த லாஜிஸ்ட்டிக் பிரிவு தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதால், தற்போது கார் உற்பத்தி பணிகள் வழக்கம்போல் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Article Published On: Friday, October 12, 2012, 16:53 [IST]
English summary
Country’s second largest car manufacturer Hyundai Motor India is planning to increase car prices by next week.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+