சான்ட்ரோவுக்கு மாற்றாக பவர்ஃபுல் இயான்: ஹூண்டாய் திட்டம்

Hyundai Eon
சான்ட்ரோ கார் விற்பனை சரிந்து வருவதையடுத்து, அதற்கு மாற்றாக அதிக பவர் கொண்ட எஞ்சினுடன் புதிய இயானை விற்பனைக்கு கொண்டு வர ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இயான் கார் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. மாதத்திற்கு சராசரியாக 8,000 கார்கள் என்ற அளவிற்கு விற்பனையாகி வருகிறது.

இயான் வரவால் சான்ட்ரோ காருக்கான மவுசு குறைந்துள்ளது. மாதத்திற்கு சராசரியாக 8,000 கார்களாக இருந்த சான்ட்ரோ விற்பனை தற்போது 4,000 கார்களை குறைந்து விட்டது.

இதையடுத்து, சான்ட்ரோ காரின் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக அதிக திறன் கொண்ட எஞ்சினை இயானில் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வர ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் இயான் காரில் 814 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது சான்ட்ரோ காரில் பொருத்தியிருக்கும் 1.1 லிட்டர் எஞ்சினை இயானில் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சான்ட்ரோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1086சிசி கொண்ட 1.1 லிட்டர் எஞ்சின் 63 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். எனவே, இந்த எஞ்சினுடன் சகல வசதிகளுடன் வரும்போது இயானின் மார்க்கெட் மேலும் உயரும் என்று ஹூண்டாய் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 13, 2012, 9:29 [IST]
English summary
Now a source informs us that Hyundai is planning to phase out the Santro Xing as the car has seen a sales decline in recent times. The company will replace the Santro Xing with a more power version of the Eon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+