விரைவில் வருகிறது ஹூண்டாய் வெலாஸ்ட்டர்

பார்த்தவுடன் மனதை கொள்ளை கொள்ள செய்யும் அசத்தலான வடிவமைப்பு கொண்ட வெலாஸ்ட்டர் பிரிமியம் காரை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வுகளையும் தற்போது மேற்கொண்டுள்ளது.

கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அப்போதே பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. மேலும், இந்த காரை பலர் இந்த கார் எப்போது இந்தியாவுக்கு வரும் என்ற கேள்வியுடன் அங்கிருந்த ஹூண்டாய் பிரதிநிதிகளை துளைத்தெடுத்தனர்.

Hyundai Veloster

இதனால், உற்சாகமடைந்த ஹூண்டாய் விரைவாகவே வெலாஸ்ட்டரை இந்திய மார்க்கெட்டில் களமிறக்கிவிட முடிவு செய்தது. இந்த நிலையில், வாடிக்கையாளர் ஆர்வத்தை தீர்த்து வைக்கும் வகையில் தற்போது புதிய வெலாஸ்ட்டரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும், மார்க்கெட்டில் இந்த காருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இருக்குமா என்பது குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகிது.

ஹூண்டாய் நிறுவனத்தின் கால் சென்டரில் புதிய வெலாஸ்ட்டர் குறித்த தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அதில் வெலாஸ்ட்டரை வாங்க பின்புலம் உள்ள வாடிக்கையாளர்களையும், அவர்களது விருப்பதையும் தற்போது தீவிரமாக திரட்டி வருகிறது.

இதைத்தொடர்ந்து, அடுத்த ஓரிரு மாதங்களில் வெலாஸ்ட்டரை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வந்துவிடும் என்று தெரிகிறது. இந்த காரில் 138 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ரூ.20 லட்சத்தில் இந்த புதிய பிரிமியம் கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 24, 2012, 13:24 [IST]
English summary
South Korean Car maker Hyundai motors is planning to launch Veloster premium car soon in Indian Market. The Veloster will come with 1.6 liter engine and churn out 138 bhp power. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+