அக்ஸென்ட் விற்பனையை நிறுத்த ஹூண்டாய் முடிவு

சான்ட்ரோ காருக்கு பின் ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய இரண்டாவது கார் மாடல் அக்ஸன்ட். ஹூண்டாயின் வரவேற்பை பெற்ற மாடல் என்றாலும், சான்ட்ரோ அளவுக்கு வெற்றிகரமான மாடலாக கூற முடியாது.
இந்த நிலையில், அக்ஸன்ட் அறிமுகம் செய்யப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த காருக்கு வரவேற்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அக்ஸன்ட் கார் விற்பனை கடந்த மாதம் குறைந்துள்ளது.
ஜூலையில் வெறும் 182 அக்ஸன்ட் கார்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது. மார்க்கெட்டில் புதிய கார்களின் வரவே அக்ஸன்ட் விற்பனை சரிந்து விட்டதற்கு காரணம். இதனால், அக்ஸன்ட் கார் விற்பனையை நிறுத்துவதற்கு ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் சிவிக் கார் விற்பனையை நிறுத்த ஹோண்டா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதேபோன்று, அக்ஸன்ட் கார் விற்பனையை நிறுத்த ஹூண்டாய் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அக்ஸன்ட் காருக்கு மாற்றாக என்ட்ரி லெவல் செடான் ரகத்தில் புதிய காரை ஹூண்டாய் களமிறக்குமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications