டீசல் எஞ்சின் ஆலை திட்டத்தை மீண்டும் ஒத்திபோட்ட ஹூண்டாய்

Hyundai i10
டீசல் கார் மீது கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்ற அச்சத்தால், டீசல் எஞ்சின் ஆலை திட்டத்தை மீண்டும் ஒத்திப் போட்டுள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ்.

சிறிய கார்களில் டீசல் மாடல் இல்லாமல் தடுமாறி வருகிறது ஹூண்டாய். தன்னை மார்க்கெட்டில் தக்க வைத்துக் கொள்ள டீசல் எஞ்சின் ஆலையை கட்ட முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. ரூ.400 கோடி முதலீட்டில் இந்த ஆலையை அமைக்கவும் ஹூண்டாய் முடிவு செய்தது

பட்ஜெட்டில் டீசல் கார் மீது கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியானதால், தனது திட்டத்தை ஒத்திப் போட்டது. பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீது கூடுதல் வரி எதுவும் விதிக்கப்பட வில்லை. மாறாக ஒட்டுமொத்தமாக அனைத்து கார்களுக்கும் வரி உயர்த்தப்பட்டது.

இதையடுத்து, டீசல் ஆலை திட்டத்தை மீண்டும் தூசி தட்டியது ஹூண்டாய். இந்த நிலையில், டீசல் மானியத்தை கட்டுப்படுத்த டீசல் கார்கள் மீது அதிகபட்சம் ரூ.2.5 லட்சம் வரை வரிவிதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், தனது டீசல் எஞ்சின் ஆலை திட்டத்தை மீண்டும் ஒத்திப் போட்டுள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ். எனவே, டீசல் ஐ10 கார் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. இருப்பினும், மத்திய அரசின் முடிவை பொறுத்து மீண்டும் டீசல் எஞ்சின் ஆலை திட்டத்தை கையிலெடுக்க ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 14, 2012, 16:41 [IST]
English summary
Hyundai Motors has again decided not to go ahead with its plans to build a diesel engine plant in India. The South Korean carmaker had previously announced its decision to build a diesel engine plant near Chennai. However reduced sales in India lead to Hyundai postponing building the plant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+