புளூயிடிக் டிசைனில் பிரிமியம் கார்களை களமிறக்கும் ஹூண்டாய்

Hyundai Elantra
சொனாட்டா மற்றும் எலன்ட்ரா மிட் சைஸ் பிரிமியம் செடான் கார்களை விரைவில் இந்திய மார்க்கெட்டில் ஹூண்டாய் களமிறக்குகிறது.

கார் மார்க்கெட்டில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் மார்க்கெட் போட்டியை சமாளிக்க தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகி்றது.

மேலும், மிட் சைஸ் கார் மார்க்கெட்டில் கூடுதல் அம்சங்களுடன் கூடிய கார்களை அடுத்தடுத்து களமிறக்க ஹூண்டாய் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க சந்தையில் சக்கை போடும் தனது எலன்ட்ரா மிட் சைஸ் காரை இந்திய சந்தையில் விரைவில் களமிறக்குகிறது. புளூயிடிக் ஸ்கல்ப்சர் வடிவமைப்புடன் வரும் புதிய எலன்ட்ரா இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாகவே கவரும் என்று ஹூண்டாய் கருதுகிறது.

புதிய எலன்ட்ரா ரூ.10 லட்சம் முதல் ரூ.13 லட்சம் விலையில் வருகிறது. இதைத்தொடர்ந்து, புளூயிடிக் சொனாட்டா பிரிமியம் செடான் காரையும் ஹூண்டாய் அறிமுகப்படுத்த உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் பிரிமியம் செடான் கார்களுக்கு மாற்றாக குறைந்த விலையில் கிடைப்பதால், சொனாட்டாவுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி இடம் உள்ளது.

எனவே, புதிய சொனாட்டா மூலம் இந்திய பிரிமியம் கார் மார்க்கெட்டிலும் முக்கிய இடத்தை பிடிக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. புதிய சொனாட்டா 2.2 லிட்டர் எஞ்சினுடன் வருகிறது.

புதிய சொனாட்டா ரூ.15 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவர்லே குரூஸ், ஹோண்டா சிவிக், டொயோட்டோ கரோல்லா மற்றும் வோக்ஸ்வேகன் ஜெட்டா கார்களுக்கு புதிய சொனாட்டா கடும் போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 9, 2012, 11:34 [IST]
English summary
Hyundai Motors is planning to increase its portfolio of cars offered in India by launching more premium cars. The two cars that are have been confirmed for India by Hyundai are the new Fluidic Sonata and the Elantra. Both these cars were on display at the 12th Delhi Auto Expo. Arvind Saxena who is Hyundai Motor India's Director (Marketing & Sales) has stated Hyundai will bring in the Elantra mid level car soon after the commercial launch of the new Fluidic Sonata. The Elantra is Hyundai's highest selling sedan in the US and will be priced in the range of Rs10 lakhs to Rs.13 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+