ஹூண்டாய் கார் நிறுவனத்துக்கு தமிழக அரசின் பசுமை விருது

சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களை கொண்ட தொழிற்சாலைகளுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசின் பசுமை விருது வழங்கப்பட்டு வருகிறது. பல பிரிவுகளின் அடிப்படையில் ஆய்வுகள் செய்து இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை செயல்படுத்தி வருவதற்காக 2011-12ம் ஆண்டிற்கான கனரக தொழிற்துறை பிரிவுக்கான பசுமை விருது ஹூண்டாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
மறுசுழற்சி மூலம் தண்ணீர் உற்பத்தி, தானியங்கி சூரிய சக்தி மின் விளக்குகள், மழை நீர் சேகரிப்பு வசதி உள்ளிட்ட ஏராளமான கட்டமைப்பு வசதிகளை சென்னை ஹூண்டாய் கார் ஆலை பெற்றுள்ளது. மேலும், கார் உற்பத்தியின்போதும் சிறப்பான பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை பின்பற்றி வருவதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் சமீபத்தில் நடந்த விழாவில் இந்த விருதினை ஹூண்டாய் மோட்டார் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இயக்குனர் சேதுராமனிடம், தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.


Click it and Unblock the Notifications








