புதி்ய ஹூண்டாய் ஐ20 கார் அறிமுகம்: விரைவில் விற்பனைக்கு வருகிறது

அனைத்து கார் மாடல்களையும் தனது புத்தம் புதிய புளுயிடிக் டிசைனுடன் மேம்படுத்தி அறிமுகம் செய்து வருகிறது ஹூண்டாய். வெர்னா, இயானை தொடர்ந்து தற்போது ஐ20 காரையும் புளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் வடிவமைப்புடன் அறிமுகம் செய்திருக்கிறது ஹூண்டாய்.
ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய ஐ20 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புளூயிடிக் டிசைனின் மூலம் ஐ20 காரின் வெளிப்புறத் தோற்றம் அதிக மாற்றங்களை கண்டுள்ளது. கிரில் வடிவமைப்பு, ஹெட்லைட், பாடி லைன் என அனைத்தும் மாற்றங்களை சந்தித்துள்ளன.
பின்பக்க பம்பர் மற்றும் டெயில் லேம்ப் டிசைனும் மாற்றம் கண்டுள்ளது. புதிய அலாய் வீல்களும் ஐ20 அழகை கூட்டுவதாக இருக்கிறது. இதேபோன்று, உள்பக்க வடிவமைப்பிலும் ஐ20 பல்வேறு புதிய அம்சங்களுடன் வருகிறது.
புதிய ஐரோப்பிய கிராஷ் டெஸ்ட் விதமுறைகளின்படி ஐ20 அப்டேட் செய்யப்பட்டிருப்பதாக ஹூண்டாய் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஐ20 வரவை தொடர்ந்து, பழைய மாடலுக்கான புக்கிங்கை கடந்த மாதம் ஹூண்டாய் நிறுத்தியது. இந்த மாத இறுதியில் புதிய புளுயிடிக் ஐ20 இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








