வரும் செப்டம்பரில் அறிமுகமாகிறது ப்ளூயிடிக் ஹூண்டாய் எலன்ட்ரா

பழைய எலன்ட்ரா காரின் வடிவமைப்பு கவர்ச்சியாக இல்லாத காரணத்தால் விற்பனையில் சோபிக்கவில்லை. எனவே, எலன்ட்ரா விற்பனையை ஹூண்டாய் நிறுத்தியது.
இந்த நிலையில், ப்ளூயிடிக் தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எலன்ட்ரா காரை மீண்டும் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொணடு வருகிறது ஹூண்டாய். முற்றிலும் மாறுபட்ட ப்ளூயிடிக் வடிவமைப்பில் படு கவர்ச்சியாக இருப்பதால் எலன்ட்ரா வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும்.
தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் புதிய எலன்ட்ரா காரின் சோதனை ஓட்டங்கள் நடந்து வருகின்றன. வரும் தீபாவளி பண்டிகையின்போது புதிய எலன்ட்ரா கார் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வர இருக்கும் புதிய எலன்ட்ராவின் இரண்டு மாடல்களிலுமே 1.8 லிட்டர் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கும். இதில், 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சம் 147 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.
டொயோட்டோ கரொல்லா ஆல்டிஸ், ஸ்கோடா லாரா, போக்ஸ்வேகன் ஜெட்டா, ரினால்ட் ப்ளூயன்ஸ் மற்றும் செவர்லே க்ரூஸ் ஆகிய கார்கள் இருக்கும் டி செக்மென்ட் மார்க்கெட்டில் கடும் போட்டியை கொடுக்கும் வகையில் வருகிறது புதிய ப்ளூயிடிக் எலன்ட்ரா.


Click it and Unblock the Notifications