அனைத்து கார்களையும் புளூயிடிக் டிசைனில் மாற்றும் ஹூண்டாய்

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் நம் நாட்டு கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த நிலையில், அந்த நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்களையும் தனது புதிய புளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் டிசைனில் மாற்றி அறிமுகப்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு புளூயிடிக் டிசைனில் வெர்னா கார் முதன்முதலாக ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. புத்தம் புதிய வடிவமைப்பில் வந்த வெர்னா வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டிலேயே புளூயிடிக் டிசைனில் வடிவமைக்கப்பட்ட இயான் காரையும் அறிமுகப்படுத்தி மார்க்கெட்டில் அனலை பரப்பியது ஹூண்டாய். இந்த நிலையில், மீதமுள்ள மாடல்களையும் புளூயிடிக் டிசைனில் அறிமுகப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது ஹூண்டாய்.
இந்த ஆண்டு மத்தியில் புளூயிடிக் எலன்ட்ரா பிரிமியம் செடான் காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்த உள்ளது. இதைத்தொடர்ந்து, சான்டா பீ எஸ்யூவியையும் புளூயிடிக் டிசைனில் வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வரவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications