எல்பிஜி மாடல் இயான் உற்பத்தியை துவங்கியது ஹூண்டாய்

Hyundai Eon
எல்பிஜி சிலிண்டர் பொருத்தப்பட்ட இயான் மாடலின் உற்பத்தியை ஹூண்டாய் துவங்கியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் இயான் கார் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புத்தம் புதிய வடிவமைப்பு, அதிக மைலேஜ் உள்ளிட்ட அம்சங்களால் வாடிக்கையாளர்களை வெகுவாகவே தன் பக்கம் ஈர்த்து விட்டது இயான்.

இந்த நிலையில், பெட்ரோல் மாடலில் மட்டும் இயான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், சந்தை போட்டியை சமாளிக்க வேண்டிய நிலையில் இயான் இருக்கிறது.

இதையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் வகையில், எல்பிஜி மாடல் இயான் காரை விரைவில் ஹூண்டாய் அறிமுகப்படுத்த இருக்கிறது.

மேலும், எல்பிஜி மாடல் இயான் காரின் உற்பத்தியை ஹூண்டாய் ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இயான், அடுத்த ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

எல்பிஜி மாடல் இயானில் பேக்டரி ஃபிட்டடு எல்பிஜி சிலிண்டருடன் 32 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கும் இருக்கும்.

எல்பிஜி மாடல் இயான் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிச்சயம் பெரிய வரவேற்பை பெறும் என்று ஹூண்டாய் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 3, 2012, 12:00 [IST]
English summary
The country's second largest car maker Hyundai motors all set to launch LPG version Eon soon. The LPG Eon now going to production level, reports said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+