டீசல் கார்களை களமிறக்குவதில் முழு கவனத்தையும் செலுத்தும் ஹூண்டாய்

Hyundia i10
மார்க்கெட்டில் நிலைத்து நிற்கும் விதமாக என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் புதிய டீசல் கார்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகளை ஹூண்டாய் மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளராக ஹூண்டாய் இருக்கிறது. இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஹூண்டாய் கார் விற்பனையில் பெரிய அளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. விற்பனை வளர்ச்சியை பதிவு செய்யாமல் விற்பனையில் சரிவு காணப்படுகிறது.

ஏனெனில், என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் நிறுவனத்துக்கு டீசல் மாடல்கள் இல்லாததே விற்பனை சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தனது விற்பனையை அதிகரிக்கும் விதமாக காம்பெக்ட் கார்களில் டீசல் எஞ்சின்களை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சிகளை அந்த நிறுவனம் தீவிரமாக இறங்கியிருக்கிறது.

ஏற்கனவே, ஐ10 காரின் டீசல் மாடலை அறிமுகப்படுத்த ஹூண்டாய் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதை நாம் தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், இயான் உள்ளிட்ட கார்களிலும் டீசல் மாடலை கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஹூண்டாய் மேற்கொண்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக, தனது எதிர்கால திட்டங்களை முற்றிலுமாக ஹூண்டாய் மாற்றியமைத்துள்ளது. இயான், ஐ10 உள்ளிட்ட கார்களின் டீசல் மாடல் விற்பனைக்கு வரும்போது நிச்சயம் அது ஹூண்டாய் விற்பனையை தூக்கி கொடுக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.

Article Published On: Saturday, October 6, 2012, 16:36 [IST]
English summary
Hyundai has been witnessing a constant slowdown in sales over the past three fiscal years. The company is now looking forward to bump up sales and for this the Korean manufacturer is looking to shift their focus completely to diesel cars.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+