ஆசிரியர் தினம்: சான்ட்ரோ, இயான், ஐ10 கார்களுக்கு சிறப்பு சலுகைகள்

சான்ட்ரோ, இயான் மற்றும் ஐ10 கார்களுக்கு இந்த சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சான்ட்ரோ கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.45,050 வரை சேமிப்பு சலுகையை பெறலாம்.
இயானுக்கு 27,250 வரை சலுகைகள் பெறலாம். அதிகபட்சமாக ஐ10 காருக்கு 53,257 வரை சேமிக்க முடியும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது. பெட்ரோல் மாடலில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு மட்டுமே சிறப்பு சலுகைகளை ஹூண்டாய் அறிவித்துள்ளது.
மேலும், விபரங்களுக்கு அருகிலுள்ள ஹூண்டாய் ஷோரூமை தொடர்பு கொள்ளுங்கள். சென்னையில் ஹூண்டாய் சான்ட்ரோ ரூ.3.46 லட்சத்திலும், இயான் ரூ.3.26 லட்சத்திலும், ஐ10 கார் ரூ.4.34 லட்சம் துவக்க எக்ஸ்ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications