சென்னை வரும் 20 ஓவர் உலக கோப்பை: ஹூண்டாய் ஷோரூம்களில் காண வாய்ப்பு

வரும் செப்டம்பரில் சர்வதேச 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டிகளின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக ஹூண்டாய் மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனை பிரபலப்படுத்தும் வகையில், 20 ஓவர் உலக கோப்பையை தனது ஷோரூம்களில் நேரடியாக காணும் வாய்ப்பை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹூண்டாய் வழங்குகிறது. டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களை சேர்ந்த ரசிகர்களுக்கு மட்டும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்க இருக்கிறது.
டெல்லியில் உள்ள ஹூண்டாய் ஷோரூமில் முதலாவதாக ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மும்பை மற்றும் சென்னையிலுள்ள ஷோரூம்களில் 20 ஓவர் உலக கோப்பையை பார்வைக்கு வைக்க உள்ளது ஹூண்டாய்.
கடந்த ஆண்டு நடந்த 50ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஹூண்டாய் அதிகாரப்பூர்வ பார்ட்னராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
20ஓவர் உலக கோப்பை பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள ஹூண்டாயின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தை பின்தொடருங்கள்.


Click it and Unblock the Notifications








