உதிரிபாகங்கள் சப்ளை பாதிப்பு: ஹூண்டாய் டீலர்களில் கார் சர்வீஸ் தாமதம்

ஹூண்டாய் சான்ட்ரோ
தொழிலாளர் பிரச்னையால் உதிரிபாகங்கள் உற்பத்தி மற்றும் சப்ளை பாதிக்கப்பட்டிருப்பதால், ஹூண்டாய் டீலர்களில் கார்களை சர்வீஸ் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.

கார்களுக்கான உதிரிபாகங்களை மொபிஸ் நிறுவனத்திடமிருந்து ஹூண்டாய் பெற்று வருகிறது. ஹூண்டாயின் துணை நிறுவனமாக மொபிஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மொபிஸ் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிமுக ஆதரவு பெற்ற தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தின் ஆதரவுடன் புதிய தொழிற்சங்கத்தை துவங்கினர்.

இதற்கு ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் அங்கீகாரம் கொடுக்கவில்லை. மேலும், அரசியல் ரீதியான அமைப்புகளுடன் தொழிலாளர்கள் இணைவதை விரும்பவில்லை என தெரிவித்து, அண்ணா தொழிற்சங்கத்தில் இணைந்த ஏராளமான தொழிலாளர்களை சஸ்பென்ட் செய்துவிட்டது.

ஆலையின் மொத்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பதால், உதிரிபாகங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தேவைக்கு தக்கவாறு உற்பத்தி இல்லாததால் ஹூண்டாய் டீலர்களில் உதிரிபாகங்கள் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கார் சர்வீஸ் மற்றும் பழுதுநீக்கும் பணிகளில் பெரும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இது வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுகத்தி இருக்கிறது. இந்த நிலையில், சஸ்பென்ட் செய்யப்பட்ட தொழிலாளர்களுடன் மொபிஸ் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே, இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மொபிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Article Published On: Tuesday, September 18, 2012, 12:25 [IST]
English summary
Hyundai car owners who have sent your cars for repairs and service watch out. You will have to wait for a pretty long time to get your car back. Hyundai's service stations will not be able to deliver your car on time as there is a severe crunch in spares supply.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+