ஐ20 புக்கிங்கை நிறுத்திய ஹூண்டாய்: ஊர்ஜிதமானது புதிய மாடல்

பிரிமியம் ஹேட்ச்பேக் காரில் ஹூண்டாய் ஐ20 வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற மாடலாக திகழ்கிறது. இந்த நிலையில், தனது அனைத்து கார் மாடல்களையும் புளூயிடிக் வடிவமைப்புடன் ஹூண்டாய் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், புளூயிடிக் ஐ20 காரை ஹூண்டாய் விரைவில் அறிமுகம் செய்கிறது. சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக புதிய புளூயிடிக் ஐ20 காரின் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில், ஐ20 காருக்கான புக்கிங் பெறுவதை நிறுத்தியுள்ளதாக ஹூண்டாய் டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், புதிய ஐ20 காரை ஹூண்டாய் விரைவில் களமிறக்க ஆயத்தமாகி இருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








