ஹூண்டாயின் கியா பிராண்டு கார் சென்னையில் மீண்டும் சோதனை

Kia Picanto
ஹூண்டாயின் கியா பிராண்டு கார் சென்னை அருகே மீண்டும் சோதனை நடத்தப்பட்டுள்ள தகவல் மீண்டும் வெளியாகியுள்ளது.

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்திய மார்க்கெட்டில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த நிலையில், தனது இடத்தை வலுப்படுத்திக்கொள்ள தனது கீழ் செயல்படும் கியா பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்காக, கியா பிராண்டின் பிகான்ட்டோ காரை சென்னை அருகே சுற்று வட்டாரப்பகுதிகளில் அந்த நிறுவனம் கடந்த ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தியதாக ஏற்கனவே எழுதியிருந்தோம்.

ஆனால், அந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து இதுவரை ஹூண்டாய் தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில், கியா பிகாண்ட்டோ காரை ஹூண்டாய் நிறுவனம் மீண்டும் சென்னை அருகே சோதனை ஓட்டம் நடத்தியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே, இந்தியாவில் கியா பிகாண்ட்டோ அறிமுகமாவதில் இருக்கும் சந்தேகம் வலுத்துள்ளது. ஆனால், இந்த காரை கியா பிராண்டில் அறிமுகம் செய்யுமா அல்லது தனது பிராண்டிலே ஹூண்டாய் அறிமுகம் செய்யுமா என்ற சந்தேகமும் தற்போது அதிகமாகியுள்ளது.

இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும், ஐ-10 காரில் பொருத்தப்படும் 1.2 லிட்டர் கப்பா எஞ்சினுடன் இந்த கார் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 4, 2012, 11:45 [IST]
English summary
South Korean car maker may be launched of its Kia brand in India to take rivals. The reports confirmed the company now testing the Kia picanto near Chennai outskirts.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+