மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய சான்டா பீ: ஹூண்டாய் அறிமுகம்

ப்ளூயிடிக் டிசைன் தத்துவத்தில் இதுவரை வந்துள்ள ஹூண்டாய் கார்கள் வாடிக்கையாளர்களையும், ஆட்டோமொபைல் துறையினரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. எனவே, தனது அனைத்து கார்களையும் ப்ளூயிடிக் டிசைன் தத்துவத்திற்கு மாற்றி வருகிறது.
அந்த வகையில், மேல்தட்டு வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த சான்டா பீ பிரிமியம் எஸ்யூவியை அடுத்து ப்ளூயிடிக் டிசைனுக்கு மாற்றி விற்பனைக்கு கொண்டு வர உள்ளது ஹூண்டாய்.
2013 சான்டா பீ என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த எஸ்யூவியின் ப்ளூயிடிக் மாடல் முதன்முறையாக நியூயார்க்கில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
உண்மையிலேயே ப்ளூயிடிக் டிசைனுக்கு பொருத்தமானது நான்தான் என்பதுபோல் கூடுதல் கவர்ச்சியும், கம்பீரமும் கலந்து நிற்கிறது சான்டா பீ.
7பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த எஸ்யூவியில் 2.2 லிட்டர் காமா டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 200 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ரகங்களில் இந்த பிரிமியம் எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு அல்லது வரும் 2014ம் ஆண்டில் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த எஸ்யூவி அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








