ஹூண்டாய் வெர்னாவில் ஸ்டான்டர்டு அம்சமாகும் ரிவர்ஸ் கேமரா

மிட்சைஸ் செக்மென்ட்டில் ஹூண்டாய் ஆல் நியூ வெர்னா வாடிக்கையாளர்கள் நன் மதிப்பை பெற்ற மாடலாக திகழ்கிறது. தற்போது வெர்னாவின் டாப் வேரியன்ட்டான எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஓ) வேரியன்ட்களில் மட்டும் ரிவர்ஸ் கேமராவுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பேஸ் வேரியன்ட் வெர்னாவிலும் ரிவர்ஸ் கேமராவுடன் விற்பனை செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. விரைவில் இஎக்ஸ் பேஸ் வேரியன்ட் வெர்னா கார்களிலும் ரிவர்ஸ் கேமராவுடன் கிடைக்கும்.
ரிவர்ஸ் கேமரா பொருத்தப்பட்டால் வெர்னாவில் விலை ரூ.17,000 முதல் ரூ.20,000 வரை அதிகரிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மிட்சைஸ் செக்மென்ட்டில் விற்பனை செய்யப்படும் கார்களில் பேஸ் வேரியன்ட்டில் ரிவர்ஸ் கேமராவுடன் விற்பனைக்கு வரும் முதல் கார் வெர்னா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications