ரெஸ்ட்டாரன்ட் வசதியுடன் அமைகிறது முதல் மினி கார் ஷோரூம்

பிஎம்டபிள்யூவின் துணை நிறுவனமாக செயல்பட்டு வரும் பிரபல பிரிட்டிஷ் கார் நிறுவனமான மினி பிராண்டு டெல்லி ஆட்டோ ஷோவில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்து இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்தது.
அடியெடுத்து வைத்த அடுத்த சில நாட்களில் 100க்கும் மேற்பட்ட மினி பிராண்டு கார்களை புக்கிங் செய்யப்பட்டு ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
மும்பையை சேர்ந்த இன்பேன்டரி கார் நிறுவனத்தை தனது முதல் அங்கீகாரம் பெற்ற இந்திய டீலராக மினி பிராண்டு நியமித்துள்ளது. மும்பையில் 12500 சதுர அடி பரப்பில் மினி பிராண்டுக்கான முதல் கார் ஷோரூம் பிரம்மாண்டமாக அமைக்கிறது இன்பேன்டரி கார் நிறுவனம்.
இந்த ஷோரூமில் கார் டிஸ்ப்ளே, சர்வீ்ஸ் ஸ்டேஷன் தவிர ரெஸ்ட்டாரன்ட் வசதியையும் கொண்டிருக்கும். இதைத்தொடர்ந்து, டெல்லியில் புதிய ஷோரூமை மினி பிராண்டு திறக்க உள்ளது. இந்தியாவில் மினி கூப்பர், மினி கூப்பர் எஸ், மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள் மற்றும் கன்ட்ரிமேன் ஆகிய கார்களை மினி பிராண்டு விற்பனை செய்கிறது.
இந்த கார்கள் பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படும். ரூ.25.5 லட்சம் முதல் ரூ.32.8 லட்சம் வரையிலான விலையில் மினி பிராண்டு கார்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








