காலம் மாறுது... காட்சிகளும் மாறுது...!!

Car Export
ஒரு நேரத்தில் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே கார்கள் மற்றும் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலை மாறி தற்போது பல நிறுவனங்கள் இந்தியாவை ஏற்றுமதி கேந்திரமாக கொண்டு கார் மற்றும் உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்ய துவங்கியிருக்கின்றன. இதனால், கணிசமான வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதோடு, அன்னிய செலவாணியும் ஈட்டப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் துறையில் ஜாம்பவான்களாக திகழும் ஜப்பானை சேர்ந்த நிசான், டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே பல வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து கார் ஏற்றுமதியை செய்து வருகின்றன. ஜப்பானிய நிறுவனமான சுஸுகியின் துணை நிறுவனமான மாருதி நிறுவனம் பல வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அந்த நிறுவனத்தின் எர்டிகா கார் சுஸுகியின் தாயகமான ஜப்பானில் அறிமுகம் செய்யப்படவில்லை. மாறாக இந்தியாவில்தான் முதலில் அறிமுகம் செய்யப்பட்டதுடன் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஹோண்டா கார் நிறுவனமும் தனது இந்திய உற்பத்திக் கொள்கைகளை அதிரடியாக மாற்றி வருகிறது. பிற நாடுகளில் உள்ள ஆலைகளுக்கு இந்தியாவிலிருந்து முக்கிய பாகங்களை ஏற்றுமதி செய்து அங்கு அசெம்பிளிங் பணிகளை மட்டுமே செய்ய திட்டமிட்டிருக்கிறது.

இந்த வரிசையில் தற்போது அமெரிக்க கார் தயாரிப்பாளரான ஃபோர்டு நிறுவனமும் இணைந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கார் எஞ்சின்களை விரைவில் ஐரோப்பிய மார்க்கெட்டுக்கு ஏற்றுமதியை துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்காக, தனது எஞ்சின் உற்பத்தி ஆலையை பெரும் முதலீட்டில் விரிவாக்கம் செய்து வருகிறது.

விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதேபோன்று, ரினால்ட் நிறுவனமும் டஸ்ட்டர் எஸ்யூவியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் நிலவும் சாதகமான சட்ட திட்டங்கள், துறைமுகங்கள், அனுபவமும், திறமையும் வாய்ந்த பணியாளர்கள், தேவையான மனித வளம், மேம்பட்டு வரும் சாலை கட்டமைப்பு வசதிகள் ஆகியவை பல வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்த்துள்ளதோடு அதிக முதலீடுகளை கண்ணை மூடிக்கொண்டு கொட்டி வருகின்றன. இதனால், சர்வதேச அரங்கில் ஆட்டோமொபைல் துறையின் புதிய கேந்திரமாக இந்தியா மாறி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலத்தை செம்மையாக்க புதிய தொலைநோக்கு திட்டங்கள், பயிற்சி பணிமனைகள், சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களையும் உருவாக்கித் தர வேண்டிய கட்டாயத்தி்ல அரசு இருக்கிறது. காலம் தாழ்த்தாமல் இந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் ஆட்டோமொபைல் உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியா ஆட்டோமொபைல் உற்பத்தியில் முதலிடத்தை பிடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, September 6, 2012, 15:33 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+