அடுத்த ஆண்டு குறைந்த விலை சொகுசு காரை களமிறக்கும் வால்வோ

பென்ஸ் பி கிளாஸ், ஆடி க்யூ3, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஆகிய என்ட்ரி லெவல் சொகுசு கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் வி40 கன்ட்ரி கிராஸ்காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது வால்வோ. ஜெர்மன் சொகுசு கார்களை இந்த ஸ்வீடன் நாட்டு தயாரிப்பு நிச்சயம் ஓரங்கட்டும் என ஆட்டோமொபைல் துறையினர் அடித்து கூறுகின்றனர்.

வால்வோ வி40 யின் அழகை கண்ணார கண்டுளிக்க அனைத்து கோணங்களிலும் பார்வைக்கு தருகிறோம். தகவல்களுடன் ஸ்லைடரில் கண்டு ரசியுங்கள்.

இந்திய பிரவேசம்?

இந்திய பிரவேசம்?

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த புதிய என்ட்ரி லெவல் காரை வால்வோ அறிமுகப்படுத்துகிறது.

பிளாட்பார்ம்

பிளாட்பார்ம்

வால்வோவின் 5 டோர் வி40 ஹேட்ச்பேக் காரின் பிளாட்பார்மில் வி40 கன்ட்ரி கிராஸ் காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.

எஞ்சின்

எஞ்சின்

115 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் எஞ்சின், 150 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சின் கொண்ட இந்த கார் மூன்று மாடல்களில் வருகிறது. 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

புருவத்தை உயர்த்தும் மைலேஜ்

புருவத்தை உயர்த்தும் மைலேஜ்

இந்த காரின் அதிக பவர் கொண்ட 2.0 லிட்டர் எஞ்சின் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தரும் என்கிறது வால்வோ. இது வாடிக்கையாளர்களை கவரலாம்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

அசத்தலான உள்ளலங்காரம், தாராள இடவசதி, குறைந்த காரபன் புகை வெளியிடுதல், மிரட்டலான தோற்றம் என ஏராளமான சிறப்பம்சங்களை தாங்கி வருகிறது.

வால்வோவின் புதிய என்ட்ரி லெவல் காராக வர இருக்கும் வி40 பிற கார்களை விட கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும். மேலும், அதிக திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இந்த கார் அதிக மைலேஜ் கொடுக்கும் என்பதும் கூடுதல் பலம். ரூ.22 லட்சம் முதல் ரூ.26 லட்சம் ஆரம்ப விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 4, 2012, 14:25 [IST]
English summary
Volvo is all set to launch the V40 Cross Country in India by mid-2013. The V40 Cross country is a crossover hatch. The V40 Cross Country has been developed from the stylish V40 hatchback.
மேலும்... #volvo #auto news #வால்வோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+