பெட்ரோல் கார் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தும் கார் நிறுவனங்கள்

பெட்ரோல் கார் விற்பனை மந்தமாகி இருப்பு அதிகரித்துள்ளதால், பெட்ரோல் கார் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக டொயோட்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், டீலர்களில் ஒரு மாதத்திற்கு மேலாக பெட்ரோல் கார்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
இதேபோன்று, ஆலைகளில் வருடாந்திர பராமரிப்புக்காக பெட்ரோல் கார் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது. இருப்பினும், டீலர்களில் இருப்பு அதிகரித்துள்ளதாலேயே பெட்ரோல் கார் உற்பத்தியை மாருதி நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று, டாடா மற்றும் ஃபியட் கார் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளன. அடுத்த மாதம் 3 நாட்கள் வரை பெட்ரோல் கார் உற்பத்தியை நிறுத்த ஃபியட் திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் அந்த நிறுவனம் வெறும் 1,000 கார்களை மட்டும் விற்பனை செய்தது. ஆனால், இந்த மாதம் இதுவரை அதில் பாதியளவு கார்கள்கூட விற்பனையாகவில்லை.
புனே ஆலையில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் முடிவு செய்துள்ளது. வரும் தீபாவளியையொட்டிய பண்டிகை காலத்தில்தான் மீண்டும் கார் விற்பனை சூடுபிடிக்கும் என்று கார் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








