பார்முலா-1 கார் பந்தயத்துக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது

கடந்த ஆண்டு இந்தியாவில் முதன்முறையாக உலகின் முதல் நிலை கார் பந்தயமாக கருத்ப்படும் பார்முலா-1 கார் பந்தயங்கள் துவங்கின. இந்த பந்தயம் இந்திய ரேஸ் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இரண்டாம் ஆண்டு பார்முலா-1 கார் பந்தயங்கள் இந்த மாதம் 26 ந்தேதி முதல் 28ந் தேதி வரை நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் 3 நாட்கள் நடைபெற இருக்கின்றன. இந்த பந்தயங்களுக்கான டிக்கெட் விற்பனை துவங்கப்பட்டுள்ளன.
கார் பந்தய களத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மெயின் ஸ்டான்ட்டில் அமர்ந்து போட்டியை ரசிப்பதற்கு, 3 நாட்களுக்கான சீசன் டிக்கெட் ரூ.21,000 விலையிலும், ஒரு நாளுக்கு ரூ.12,000 விலையிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
தவிர, பந்தய களத்தின் 1-2 மற்றும் 8-9 திருப்பங்களில் நின்று பார்ப்பதற்கு மூன்று நாட்களுக்கு ரூ.3,000 கட்டணமாகவும், போட்டியின் இறுதி நாளுக்கு ரூ.2,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








