ஒரு கல்லில் இரு மாங்காய் வசதியுடன் இன்டெல் வழிகாட்டி சாதனம்!
கார்களுக்கான புதிய வழிகாட்டி சாதனத்தை விரைவில் அறிமுகப்படுத்துகிறது இன்டெல். இதில், ஓட்டுனர் மற்றும் பக்கத்தில் இருக்கும் பயணி ஒரே நேரத்தில் தகவல்களை பெறுவதற்கான வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இன்டெல் நிறுவனம் கம்ப்யூட்டர்களுக்கான பிராசஸர் தயாரிப்பில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனம் தற்போது கார்களுக்கான இன்போடெயின்மென்ட் சிஸ்டம் எனப்படும் வழிகாட்டி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் வழங்கும் ஒருங்கிணைந்த சாதனத்தை தயாரித்துள்ளது.

'இன் வெகிக்கிள் இன்போடெயின்மென்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டி சாதனத்தில் டிரைவரும், பக்கத்தில் அமர்ந்திருக்கும் பயணியும் இயக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சாலையில் செல்வதற்கான வழிகாட்டும் தகவல்கள் மற்றும் ஓட்டுனருக்கான தேவையான தகவல்களை பெறும் அதே சமயத்தில் பக்கத்தில் இருக்கும் பயணி இணையதளங்களிலிருந்து பாடல்கள் மற்றும் திரைப்படங்களை தரவிறக்கம் செய்ய முடியும்.
இதேபோன்று, ஒரே நேரத்தில் பல்வேறு வசதிகளை பெற தக்க வகையில் இந்த ஒருங்கிணைந்த மின்னணு சாதனத்தை இன்டெல் உருவாக்கியிருக்கிறது. இந்த புதிய சாதனம் விரைவில் சந்தைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்பாக விலை விபரத்தை அறிவிக்க இன்டெல் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








