மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 : சிறப்பு தகவல்கள்

Alto 800
மாருதி 800 மற்றும் ஆல்ட்டோ கார்களுக்கு மாற்றாக நிலை நிறுத்தப்படுகிறது. எனவே, ஆல்ட்டோ மற்றும் 800 கார்களின் பெயரை சேர்த்து ஆல்ட்டோ 800 என்ற பெயரில் வருகிறது.

ஆல்ட்டோவில் பொருத்தப்பட்டிருக்கும் 796 சிசி எஞ்சின் டியூனிங் செய்யப்பட்டு புதிய ஆல்ட்டோ 800 காரில் பொருத்தப்பட்டிருக்கிறது. இது அதிக பெர்ஃபார்மென்ஸ் மற்றும் 15 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

அராய் சான்றுபடி லிட்டருக்கு 22.74 கிமீ மைலேஜ் தரும். பெட்ரோல் தவிர சிஎன்ஜி மாடலிலும் விற்பனைக்கு வரும் புதிய ஆல்ட்டோ சிஎன்ஜியில் செல்லும்போது ஒரு கிலோவுக்கு 30.46 கிமீ வரை மைலேஜ் செல்லும் என்கிறது மாருதி.

புதிய சஸ்பென்ஷன் கொண்டிருப்பதால் சிறப்பான ஓட்டுதல் தரத்தை வழங்கும். 3 வேரியண்ட்களில் புதிய ஆல்ட்டோ 800 விற்பனைக்கு வருகிறது. பேஸ் வேரியண்ட் ரூ.2.45 லட்சத்திலும், டாப் வேரியண்ட் ரூ.3 லட்சத்திலும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. பெட்ரோல் வேரியண்ட்டை விட சிஎன்ஜி வேரியண்ட் ரூ.45,000 கூடுதல் விலை கொண்டதாக இருக்கும்.

பழைய ஆல்ட்டோவை விட 15 மிமீ கூடுதல் ஹெட்ரூமையும், 23 மிமீ கூடுதல் லெக்ரூமையும் கொண்டிருக்கும் என்பதால் பயணிகளுக்கு கொஞ்சம் தாராளமாக அமர்ந்து பயணம் செய்யலாம்.

டாப் வேரியண்ட்டில் பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், ஏசி, ஸ்டீரியோ சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். பழைய ஆல்ட்டோவைவிட உள்ளலங்காரமும் கவர்ச்சியாகவும், தரமாகவும் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 26, 2012, 12:01 [IST]
English summary
We now have more juicy details of the Alto 800, a car that Maruti hopes will grow its shrinking market share in the entry level small car market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+